search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் சிறைபிடிப்பு"

    ஈரான் கடலோர பாதுகாப்பு படையினரால் கைதான தமிழக மீனவர்கள் 6 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #EdappadiPalaniswami #NarendraModi #PMModi
    சென்னை :

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் அரபிக் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடந்த மாதம் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் அனைவரும் ஈரானில் உள்ள கிஷ் தீவில் ஒரு மாத காலமாக படகிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், தமிழக மீனவர்கள் 6 பேரையும் ஈரானில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார். #EdappadiPalaniswami #NarendraModi #PMModi
    இலங்கை கடற்படையினரால் பிடித்து சென்ற மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இந்நிலையில் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாலமுருகன் உள்பட 6 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், செந்தில்குமாருக்கு சொந்தமான விசைப்படகில் மோதினர். இதில், விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதனால் விசைப்படகில் இருந்து பாலமுருகன் உள்பட 6 பேரும் கடலில் தத்தளித்தனர். அவர்கள் 6 பேரையும் கடற்படையினர் பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த சம்பவத்தை கண்டித்தும், அவர்களை பிடித்து சென்ற 6 மீனவர்களை விடுவிக்க கோரியும், மீன்பிடிக்கும்போது கடலில் தவறி விழுந்து இறந்த ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலைவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விசைப்படகுகள் மீன்பிடி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேர் மற்றும் அவர்களது இரு படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. #TNFishermen #SriLankanNavy
    புதுக்கோட்டை: 

    இந்தியா - இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. 

    அந்த வகையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேர் மற்றும் அவர்களது இரு படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

    முன்னதாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், இரு வாரங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. #TNFishermen #SriLankanNavy

    ×